இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 48,918 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் 5,834 பேர் 21 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 9 பேர் உயிரிழந்துள்ளனர்

இதேவேளை களுகங்கை – மில்லகந்த பகுதியிலும், கிங் கங்கை – பத்தேகம பிரதேசத்தில் பெருக்கெடுக்கும் நிலையை அடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.இதுதவிர அத்தனகலுஒய துனமலே பகுதியில் பெருக்கெடுத்துள்ளது.

இதன் காரணமாக அத்தனகலுஒயவிற்கு இரு பகுதியிலும் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் நீர்ப்பாசன திணைக்களம் கோரியுள்ளது.

அத்துடன் பழைய மன்னார் வீதியின் எலுவங்குளம் பகுதி தற்போது நீரில் மூழ்கியுள்ளது.

இதன் காரணமாக அந்த வீதியுடனான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் 24 மணித்தியாலத்தினுள் மேல் ,மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 150mm மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அத்துடன் களுத்துறை, காலி,பதுளை,கேகாலை ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

கடலில் கடும் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர் மற்றும் கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அதாவனத்துடன் செயல்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை தாழமுக்கமாக வலுவடைந்துள்ளமையே இதற்கான காரணம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது

0
Shares