பாகிஸ்தான் – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்ட நிலவரம்

பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றது.

தனது முதல் இன்னிங்ஸ்க்காக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 255 ஓட்டங்களை பெற்றது.

தொடர்ந்து நேற்றைய தினமும் தமது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 482 ஓட்டங்களை பெற்றது.

இதனை அடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 30 ஓட்டங்களை பெற்றது.

இந்த நிலையில் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சுக்காக தற்போது துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலிய அணி சற்று முன்னர்வரை  20.2 ஓவர்களில் 48 ஓட்டங்களை பெற்றுள்ளது.

0
Shares