முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ  விஷேட மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகினார்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று  காலை விஷேட மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட வழக்கில் அவர் விஷேட மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

0
Shares