merry christmas

happy

இன்றும் நாளையும் மழை வீழ்ச்சி மேலும் அதிகரிக்கக்கூடும்

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கமானது மேலும் பலமடைந்து ஒரு ஆழமான தாழமுக்கமாக விருத்தியடைந்து அக்டோபர் 9 ம் திகதி 02:00 மணியளவில் வட அகலாங்கு 14.30 மற்றும் கிழக்கு நெடுங்கோடு 87.50களுக்கு அருகில் நிலை கொண்டுள்ளது. இத்தொகுதியானது திருகோணமலைக்கு 950 km தூரத்தில் நிலை கொண்டுள்ளது.

இத் தொகுதியின் தாக்கம் காரணமாக, இலங்கையில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை இன்றும் நாளையும் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், தென், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 km வரையான அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

இலங்கையின் ஏனைய பிரதேசங்களில் குறிப்பாக பி.ப 2.00 மணிக்குப் பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

மேல், வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 mm க்கும் அதிகமான மிகவும் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்தில் 100 mm அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மேலும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வானிலை அவதான நிலையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

0
Shares