merry christmas

happy

பாகிஸ்தான்-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்டம் இன்று

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 30 ஓட்டங்களை பெற்றுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி துபாயில் இடம்பெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய தனது முதல் இன்னிங்ஸ்க்காக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 255 ஓட்டங்களை பெற்றது.

தொடர்ந்து நேற்றைய தினமும் தமது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 482 ஓட்டங்களை பெற்றது.

இதனை அடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 30 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியின் 3ம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

0
Shares