டிட்லி புயல் ஒடிசா ,ஆந்திரா மாநிலங்களிடையே கரை கடந்தது – இந்திய வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்லி புயல் ஒடிசா மற்றும் ஆந்திரா மாநிலங்களிடையே இன்றைய தினம் காலை வேளையில் கரை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 140-150 km வேகத்தில் காற்று வீசியுள்ளது.

புயலின் தாக்கம் காரணமாக ஒடிசா கடற்கரைகளில் பலத்த மழை பெய்து வருவதாக குறிப்பிடப்படுகிறது.

முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து ஒடிசாவின் கடலோர மாவட்டங்களான புரி, கேந்தரபரா, ஜகத்சிங்பூர், குர்டா, கஞ்சம் ஆகிய 5 மாவட்டங்களில் தாழ்வான பிரதேசங்களில் வசிக்கும் சுமார் 3 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஒடிசா,ஆந்திரா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு 1,000 தேசிய பேரிடர் மீட்புப் படையினரை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.

ஒடிசாவில் பள்ளி, கல்லூரிககளுக்கு வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய 2 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் 836 பாதுகாப்பு முகாம்கள் திறக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

0
Shares