போட்டி நிர்ணய மற்றும் ஊழல் செயற்பாடுகளை குற்றவியல் குற்றமாக பிரகடனப்படுத்த நடவடிக்கை

போட்டி நிர்ணய மற்றும் ஊழல் செயற்பாடுகளை குற்றவியல் குற்றமாக பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

தற்பொழுது இலங்கை கிரிக்கெட் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கே குறித்த சட்டமூலத்தை கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் இலங்கை கிரிக்கெட் தொடர்பில் விளையாட்டு துறை அமைச்சரிடம் அனுர குமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

0
Shares