merry christmas

happy

இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்

உலகம் முழுவதும் பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை புரிகின்றனர். ஆனாலும் பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.பெண் குழந்தைகளை கருவிலேயே அழிக்கும் செயலும் வேதனையான விடயம்.

பெண் குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுத்தல்,அவர்களின் உரிமைகளை காப்பது மற்றும், சாதனைகளை அங்கீகரிக்க வலியுறுத்தி ஐக்கியநாடுகள் சார்பில் அக்டோபர் 11ம் திகதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

‘அறிவார்ந்த பெண் படைகளுடன்’ என்பது இவ்வாண்டின் மையக்கருத்தாகும்.

பெண் குழந்தைகள் கல்வி கற்பதன் மூலமாக சமூகம் முன்னேறும்.ஆனாலும் இன்றும் கூட சில நாடுகளில் பெண்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்படுகிறது. இந்நிலை மாற வேண்டும்.

“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்”

0
Shares