தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை இன்றிலிருந்து சிறிது குறைவடையும்

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட “TITLI” என்ற பலமான சூறாவளிக் காற்றானது இன்று அதிகாலை 2 மணிக்கு வட அகலாங்கு 18.70 மற்றும் கிழக்கு நெடுங்கோடு 84.90களுக்கு அருகில் நிலை கொண்டுள்ளது.

இத்தொகுதியானது திருகோணமலைக்கு 1200 km தூரத்தில் நிலை கொண்டுள்ளதுடன் மேலும் பலமடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை இந்தியாவின் ஆந்திரப்பிரதேசக் கரையை கடக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

இலங்கையின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை இன்றிலிருந்து சிறிது குறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, தென், மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன . சில இடங்களில் 75 mm அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையின் ஏனைய பகுதிகளில் குறிப்பாக பிற்பகல் 2.00 மணிக்கு பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

அத்துடன் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்வதற்கு அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை அவதான நிலையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

0
Shares