பத்தரமுல்லை ஆடை விற்பனை நிலையமொன்றில் தீடீர் தீப்பரவல்

பத்தரமுல்லை – பெலவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் இன்று முற்பகல் தீடீர் தீப்பரவல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

தீயினை கட்டுப்படுத்துவதற்காக கோட்டை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் சம்பவ இடத்திற்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் 174ம் இலக்க பேருந்து வீதியான பொரள்ளை – கொட்டாவை வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தீயணைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் குறித்த பகுதி புகையால் சூழ்ந்துள்ளதால் இவ்வாறு வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

0
Shares