“ஏனைய தொழிற்சங்கங்களுடன் இணைந்து செயற்பட தயார் “- அமைச்சர் பழனி திகாம்பரம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பள அதிகரிப்பு விடயத்தில் பொதுமக்களின் நன்மை கருதி ஏனைய தொழிற்சங்கங்களுடன் இணைந்து செயற்பட தயார் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக உரிய சம்பள அதிகரிப்பு வழங்கப்படாவிட்டால், ஏனைய தொழிற்சங்கங்களையும் இணைத்துக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.

இதுதொடர்பில் பதில் அளிக்கும் போது அமைச்சர் பழனி திகாம்பரம் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, இன்று இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையில் இணக்கப்பாட்டை எட்ட முடியாவிட்டால், சம்பள பிரச்சினையை தொழில் திணைக்களத்தினதும், அரசாங்கத்தினதும் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளில் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை 500 ரூபாவிலிருந்து 575 ரூபா வரை அதிகரிக்க முதலாளிமார் சம்மேளனம் இணங்கியதுடன், இதனை ஏற்றுக்கொள்ள தொழிற்சங்கங்கள் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

0
Shares