விஜயகாந்த் வீட்டில் திருட்டு !

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அவர்களின் வீட்டிலிருந்து 2 பசுமாடுகள் களவு போயுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜயகாந்த் சென்னை விருகம்பாக்கத்திலுள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அத்துடன் அவர் சென்னை காட்டுப்பாக்கத்தில் புதிதாக வீடு ஒன்றையும் கட்டி வருகிறார்

அந்த வீட்டில் செல்லப்பிராணிகளும் கால்நடைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.திடீரென வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த இரண்டு பசு மாடுகள் திடீரென காணாமல் போயுள்ளன . பசுமாடுகள் காணாமல் போனமை குறித்து பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி பொலிஸார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர். முன்னாள் எதிர்க்கட்சி தலைவரான விஜயகாந்த் வீட்டிலேயே பசுமாடுகள் காணாமல் போயுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0
Shares