merry christmas

happy

வடக்கின் கில்லாடிகள் – பாடும் மீன் அணியினர் !

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் 100 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்படும் “ வடக்கின் கில்லாடி” உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் பிரரம்மாண்டமான இறுதிப்போட்டி நேற்று அரியாலை உதைபந்தாட்ட பயிற்சி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது

நடப்புசம்பியன்கள் குருநகர் பாடும் மீன்கள் அணியினை எதிர்த்து தேசிய ரீதியில் அனுபவம் வாய்ந்த வீரர்களை உள்ளடக்கிய இளவாலை யங் ஹென்றிசியன்ஸ் அணி மோதியிருந்தது .

இறுதிப்போட்டியில் யாழின் கில்லாடி யார்? உதைபந்தாட்ட தொடரில் தொடர்ச்சியாக இரண்டு முறை கிண்ணம் வென்று நடப்புசம்பியன்களாக ஜொலித்துக்கொண்டிருந்த பாடும் மீன் அணியினர், நேற்றைய இறுதிப்போட்டியில் இளவாலை யங் ஹென்றீசியன்ஸ் அணியினை 2க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று வடக்கின் கில்லாடி பட்டத்தினை வென்றுள்ளனர்.

0
Shares