merry christmas

happy

உச்ச நீதிமன்ற நீதிபதியாக நலின் பெரேரா ஜனாதிபதியால் நியமனம்

 

இலங்கையின் 46வது பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதிபதி நலின் பெரேராவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.

தற்போதைய பிரதம நீதியரசர் பிரசாத் டெத் இன் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவதை தொடர்ந்தே ஜனாதிபதி நலின் பெரேராவை நியமித்துள்ளார்.

ஜனாதிபதி தனது நியமனத்தை பரிசீலிக்குமாறு அரசியலமைப்பு சபையை கேட்டுக் கொண்டதையடுத்து,
இறுதி முடிவை எடுப்பதற்காக அரசியலமைப்பு சபை இன்று சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது.

கடந்த வருடம் மார்ச் மாதம் 02ம் திகதி இலங்கையின் 45வது நீதியரசராக பதவியேற்ற பிரசாத் டெத் இன்று ஒய்வு பெறுவதையடுத்தே இவர் நியமிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

0
Shares