merry christmas

happy

சசிகலா அ.தி.மு.கவிலிருந்து நீக்கம் !

அ.தி.மு.கவிலிருந்து சசிகலா நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.அ.தி.மு.கவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அமைப்பு ரீதியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். பொதுச் செயலாளர் பதவி தொடங்கி கிளைச் செயலாளர் பதவி வரை தேர்தல் மூலமாகவே அ.தி.மு.கவில் நியமிக்கப்பட வேண்டும் என்பது விதிமுறையாக காணப்படுகிறது.

இதே போல அமைப்பு தேர்தலுக்கு முன்னதாக, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அ.தி.மு.க உறுப்பினர்கள் தங்களது உறுப்பினர் அட்டையை புதுப்பிக்க வேண்டியதும் கட்டாயம்.

அதன்படி கடந்த 2013ம் ஆண்டு அமைப்பு தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் எந்த பதவிக்கும் போட்டி இல்லாத காரணத்தினால் பொதுச் செயலாளர் தொடங்கி அனைத்து பகுதி நிர்வாகிகளும் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் விருப்பப்படி தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் அமைப்பு தேர்தல் முடிந்து 5 ஆண்டுகள் முடிந்த நிலையில் தற்போது தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலையில் அதற்கு முன்னதாக உறுப்பினர்கள் தங்கள் உறுப்பினர் அட்டைகளை புதுப்பிக்க வேண்டும்.

அந்த வகையில் புதுப்பிக்கப்பட்ட அட்டைகள் உறுப்பினர்களுக்கு விநியோகம் செய்யும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பி.எஸ்., முதலமைச்சரும் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளருமான ஈ.பி.எஸ் உள்ளிட்டோர் கட்சி அலுவலகம் வந்து உறுப்பினர் அட்டையை வழங்கினர்.

இந்த நிகழ்வின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டதுடன், அ.தி.மு.கவில் இருந்தும் சசிகலா நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

0
Shares