இந்தியா-மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட 20-20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றியீட்டியது

இந்தியா மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் முதல் போட்டி நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி களத் தடுப்பை தெரிவு செய்துள்ளது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 109 ஓட்டங்களைப் பெற்றது.

110 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கோடு துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 17.5 ஓவர்களில் 110 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.

0
Shares