சூப்பர் ஸ்டாருக்கு உலகநாயகனின் வாழ்த்துச்செய்தி

ஷங்கரின் இயக்கத்தில் 3வது முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் நடித்துள்ள ‘2.0’ திரைப்படத்தின் Trailer வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் இடம்பெற்றது.

இதில், ரஜினி, ஷங்கர் அக்ஷய் குமார் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இதில், “நண்பர் ரஜினிக்கு வாழ்த்துகள், 2.0 ரஜினியின் திரை வாழ்வில் ஒரு மைல் கல்லாக அமையும், இயக்குனர் ஷங்கரின் உழைப்பு நிச்சயம் வெற்றிபெறும்” என்று கூறி உலகநாயகன் கமல்ஹாசன் தன்னுடைய வாழ்த்துச்செய்தியை தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் “எந்திரன்” திரைப்படத்தில் கதாநாயகனாக கமல்ஹாசன் நடிக்கவிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

0
Shares