அட்டன் மல்லியப்பு பிரதேசத்தில் கார் விபத்து

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் மல்லியப்பு பிரதேசத்தில் கார்
ஒன்று இன்று அதிகாலை மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக இளைஞர்கள் சென்ற
குறித்த காரே இவ்வாறு விபத்துகுள்ளாகியுள்ளதாகவும், அவர்களுக்கு
எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

0
Shares