“தாய்மண் இதற்கு முன்னர் எப்பொழுதும் இவ்வாறானதொரு நெருக்கடியான சூழ்நிலையை சந்திந்திருக்கவில்லை”- சபாநாயகர்

இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

தாய்மண் இதற்கு முன்னர் எப்பொழுதும் இவ்வாறானதொரு நெருக்கடியான சூழ்நிலையை சந்திந்திருக்கவில்லை என்பதை சபாநாயகர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இடம்பெறாத அரசியல் குழப்பநிலையில் இலங்கை தள்ளப்பட்டும் நான் மௌனமாக இருந்தேன்.

ஆனால் எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமையையும் காப்பதற்கும், இது வரை காலம் பாதுகாத்து வந்த ஜனநாயகத்தை தகர்த்தெறிய விடாது பாதுகாப்பதற்கு தற்பொழுது மனச்சாட்சிக்கு விரோதமின்றி நடுநிலையாக கடமை புரிய வேண்டிய நிலைக்கு நான் தள்ளப்பட்டுள்ளேன்.’

‘இதேவேளை நான் நடுநிலையை பேணுவது தேசத்திற்கு செய்ய வேண்டிய தலையாய கடமையாகவுள்ளது. நடுநிலையாக செயற்பட்டு வந்த அரச அதிகாரிகள், அமைச்சுக்களின் ஊழியர்களை பலவந்தமாக அநாகரிகமான முறையில வெளியேற்றியமை தொடர்பில் அறியக்கிடைத்தும் ஜனாதிபதியாகிய நீங்கள் மௌனம் சாதிப்பது வேதனையளிக்கிறது.

இதேவேளை பெரும்பான்மையினரின் கருத்து இடமளிக்காது அவர்களது உரிமைகள் மீறப்பட்டுள்ள நிலையை தங்களுக்கு அறியத் தந்தும் அதனைப் பொருட்படுத்தாமல் செயற்படுவதை சர்வதேசத்திற்கு தெரிவிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என சபாநாயகர் கரு ஜயசூரிய வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
Shares