இரத்தினபுரி மாவட்டத்தின் பல இடங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆய்வு பணிமனையினால் இரத்தினரபுரி மாவட்டத்தின் பல
இடங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எல்ல மற்றும் பண்டாரவளை ஆகிய இடங்களுக்கு இடையில்
புகையிரத பாதையில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்துக்கு பாதிப்பு
ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பொல்கஹவெல – மருதானை பிரதான புகையிரத
பாதையின் புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.

களனிவெலி ஊடாக பயணிக்கும் புகையிரத சேவைகளிலும தாமதம்
ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இருவேறு பாதைகளிலும் புகையிரதங்களில் ஏற்பட்டுள்ள இயந்திர
கோளாறு காரணமாக இவ்வாறு புகையிரத சேவைகள் தாமதமாகியுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.

0
Shares