இன்றைய போட்டியுடன் ரங்கன ஹேரத் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 1வது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டி காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டியுடன் இலங்கை அணியின் சுழந்து பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

40 வயதுடைய ரங்கன ஹேரத் இதுவரை 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 430 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது 20-20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளினால் வெற்றிப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

0
Shares