“எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம் ஒன்றே ஸ்தாபிக்கப்படும்”- ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி

எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம் ஒன்றே ஸ்தாபிக்கப்படும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மண் பியதாச இதனை தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை தலைமைத்துவமாக கொண்ட கூட்டமைப்பு அரசாங்கம் ஒன்றே ஸ்தாபிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

உற்பத்தி பொருளாதாரம், சகலரும் வாழக்கூடிய இலங்கை ஆகியவற்றை உள்ளடக்கிய வகையிலே புதிய அரசாங்கம் உருவாக்கப்படும் என ரோஹன லக்ஷ்மண் பியதாச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அகில இலங்கை செயற்குழு நாளை மறுதினம் முற்பகல் கூடவுள்ளது.

இந்த செயற்குழு, கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பத்தரமுல்லையில் உள்ள அபேகம வளாகத்தில் இடம்பெறவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

0
Shares