புதிய அரசாங்கத்தில் இணைவதற்கு தீர்மானமில்லை: பிரதி அமைச்சரின் கூற்றுக்கு ரவூப் ஹக்கீம் மறுப்பு

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புதிய அரசாங்கத்துடன் இணைவதாக பிரதி அமைச்சராக பதவியேற்றுள்ள நிஷாந்த முத்துஹெட்டிகம கூறியுள்ள கருத்தை கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் மறுத்துள்ளார்.

நேற்றிரவு தனது உத்தியோகபூர்வ ,ல்லத்தில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு உலமாக்கள் கலந்துகொண்ட சந்திப்பிலேயே ரவூப் ஹக்கீம் இக்கூற்றை மறுத்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதுவரை எந்த விதமான தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை எனவும்,

அதேவேளை, புதிய அரசாங்கத்தின் ணைவதாக பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம கூறிய கருத்தை தான் மறுப்பதாகவும் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.

0
Shares