இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 1வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தின் தற்போதைய நிலவரம்

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 1வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில், 8 விக்கட்டுக்களை இழந்து 321 ஓட்டங்களை பெற்றிருந்தது .

தமது இறுதி டெஸ்ட் போட்டியில் நேற்று விளையாடிய ரங்கன ஹேரத் காலி மைதானத்தில் தனது 100 ஆவது சர்வதேச டெஸ்ட் விக்கட்டை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும் .

இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி சற்றுமுன்னர் வரை  9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 342 ஓட்டங்களை பெற்று தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடி வருகிறது .

 

 

0
Shares