ட்ரெயிலருக்கே இவ்வளவு என்றால் படத்துக்கு எப்படி இருக்கும் !

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 திரைப்படம் இம்மாதம் 29 ம் திகதி வெளியாகவுள்ளது. பிரம்மாண்ட செலவில் ரூ 550 கோடியில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் Trailer அண்மையில் வெளிவந்தது. Trailer வெளியீட்டுக்காக சென்னையில் பெரும் விழா நடத்தப்பட்டுள்ளது.

ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அகஷய் குமார் வில்லனாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் இத்திரைப்படம் வெளிவரவுள்ளது.

இன்று முதல் இந்தியாவில் 12,000 தியேட்டர்களில் ட்ரைலரை வெளியிடுகிறார்களாம். இதில் 1000க்கு அதிகமான தியேட்டர்களில் படத்தின் 3D தொழில்நுட்ப Trailer வெளியாகுமாம்.

0
Shares