இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 1வது டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டம் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 1வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 3ம் நாள் ஆட்டம் நேற்று நிறைவடைந்துள்ளது.

462 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தமது 2வது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி நேற்றைய 3ம் நாள் ஆட்ட முடிவு வரை விக்கட் இழப்பின்றி 15 ஓட்டங்களை பெற்றுள்ளது.

முன்னதாக தமது 1வது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 321 ஓட்டங்களை பெற்றது.

தமது 1வது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 203 ஓட்டங்களை பெற்றது.

இதனையடுத்து தமது 2வது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 6 விக்கட்டுக்களை இழந்து 322 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்தி கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இன்று மு.ப 10 மணிக்கு 4வது நாள் ஆட்டம் ஆரம்பமாகவுள்ளது

0
Shares