நீரில் மூழ்கியுள்ள நிலையில் 6 பேர் மீட்பு

முல்லைத்தீவு – அலம்பில் நித்தகைக்குளம் உடைப்பெடுத்ததன்
காரணமாக தாழ்நில பிரதேசம் நீரில் மூழ்கியுள்ள நிலையில், குறித்த
பகுதியில் சிக்கிய 6 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

விமானப்படை ஹெலிகொப்டரின் உதவியுடன் ஒரே குடும்பத்தைச்
சேர்ந்த 6 பேரும் மீட்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்
தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை குளத்தில் 9.5அடி நீ்ர் குளத்தில் காணப்பட்டதாகவும், இரவு பெய்த கன மழை காரணமாக நீர் மட்டம் 15அடிக்கு மேல் அதிகரித்ததால் குளத்தின் கட்டு உடைப்பெடுத்திருக்கலாம் எனவும் அப்பகுதியைச்சேர்ந்த விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

0
Shares