30 செயற்கை கோள்களை ஓரே நேரத்தில் விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோ

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் எதிர்வரும் வியாழக்கிழமை (நவம்பர் 29)ஒரே நேரத்தில் 30 செயற்கைக்கோள்களை PSLV ராக்கெட் மூலமாக விண்ணில் செலுத்தவுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ நிறுவனம் வர்த்தக தளமாக இருப்பதால், குறைந்த செலவில் வெளிநாட்டு ராக்கெட்களையும் விண்ணில் செலுத்தி வருகின்றது.

இந்த முறையும் அமெரிக்கா போன்ற நாடுகளின் ராக்கெட்களையும் ஓரே நேரத்தில் விண்ணில் செலுத்த இருக்கின்றது.

இதில் Nano செயற்கைக்கோள்கள், சிறிய அளவிலான செயற்கைக்கோள்களும் அடங்கும். 30 Satelliteகளில் 23 செயற்கைக்கோள்கள் அமெரிக்காவினுடையது. இவை அனைத்தும் PSLV C43 Rocket மூலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வியாழன் காலை 9.59 மணியளவில் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.


சிறிய அளவிலான செயற்கைக்கோள்கள் அனைத்தும் Hyper Spectral Imaging Satellite ஆகும். அதாவது நிறமாலை செயற்கைக்கோள்கள். பூமியில் இருந்து 623 கிமீ தொலைவில் விண்ணில் நிலை நிறுத்தப்படும் இந்த செயற்கைக்கோள்கள், பூமியை நிறமாலை மின்காந்தஅலை உதவியுடன் படம்பிடிக்கும்.

இத்தகைய செயற்கைகோள்களை உருவாக்கப் பயன்படுத்தப்படும் Computer chip உள்ளிட்ட கருவிகள் அனைத்தும் இந்தியாவில் சண்டீகரில் தயாரிக்கப்பட்டுள்ளது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

0
Shares