ஆளில்லாத 1வது விண்கலம் 2020 டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்படவுள்ளது

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 2021 ஆம் ஆண்டில் விண்வெளிக்கு மனிதனை அனுப்பவுள்ளதாக இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.

பூமியை கண்காணிக்கும் செயற்கைகோள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 30 செயற்கைகோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக நேற்று விண்ணுக்கு செலுத்தியது.

இதனை தொடர்ந்து ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இஸ்ரோ தலைவர் கே.சிவன், நிருபர்களுக்கு பேட்டி அளித்த போதே இதனை தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ இதுவரை 20 நாடுகளை சேர்ந்த 270 செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது.

இது உலக அளவில் இஸ்ரோவுக்கு நன்மதிப்பை பெற்று தந்துள்ளது. புவி வட்டப்பாதையில் இப்போது இஸ்ரோவின் 47 செயற்கைகோள்கள் தகவல் தொடர்புகள், புவி கண்காணிப்பு, அறிவியல் ஆய்வுகள், கடல்சார் ஆய்வுகள் போன்ற பயன்பாட்டுக்காக செயல்பட்டு வருகின்றன எனவும்,

ஆளில்லாத முதலாவது விண்கலம் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது எனவும் இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து மேலும் ஒரு விண்கலம் 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் விண்ணில் செலுத்தப்படுவதாகவும்,

அதனை தொடர்ந்து ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மனிதர்கள் செல்லும் விண்கலம் விண்ணில் செலுத்தப்படுகிறது எனவும் இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.

0
Shares