பகை காரணமாக அந்த பிரபலத்தை மட்டும் தீபிகா படுகோன் திருமணத்திற்கு அழைக்கவில்லை !

 

அண்மையில் நடிகை தீபிகா படுகோன் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்துகொண்டார். திருமணம் வெளிநாட்டில் நடந்தாலும் இந்தியாவில் வரவேற்பு நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பாலிவுட் நட்சத்திரங்களுக்கு நடத்தப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் ஷாருகான், அமிதாப் பச்சன் உட்பட இந்திய சினிமா பிரபலங்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

ஆனால் இந்நிகழ்ச்சிக்கு ஒரே ஒரு நடிகையை மட்டும் தீபிகா அழைக்கவே இல்லையாம். நடிகை கங்கனா ரணாவத் தான் அது !

சில ஆண்டுகளாகவே தீபிகாவுக்கும் கங்கனா இடையில் வெளிப்படையான மோதல் போக்கு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. பேட்டிகளில் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி பேசிக்கொண்டதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

0
Shares