மகளிர் விடுதியில் ரகசிய கேமரா !- தொழில்நுட்பத்துடன் சுலபமாக கண்டுபிடித்த பெண்கள்

சென்னை ஆதம்பாக்கத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கும் தனியார் விடுதியொன்றில் படுக்கை மற்றும் குளியல் அறைகளில் ரகசிய கேமரா பொருத்திய விடுதியின் உரிமையாளரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

விடுதியில் தங்கியிருந்த பெண்களே சந்தேகம் ஏற்பட்டு தேடிக்கண்டுபிடித்து ரகசிய கேமராக்கள் பற்றி பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

சென்னை ஆதம்பாக்கத்தில் சஞ்சீவி என்பவர் 3 மாதங்களுக்கு முன்னர் அடுக்குமாடி குடியிருப்பொன்றில் மகளிர் விடுதியை தொடங்கியுள்ளார் . மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களில் பணிபுரியும் 6 பெண்கள் மாத வாடகை அடிப்படையில் அங்கு தங்கியிருந்தனர்.கடந்த சில நாட்களுக்கு முன் குளியல் அறையில் தண்ணீர் வரவில்லை என சஞ்சீவியிடம் பெண்கள் புகார் கூறியிருந்தனர்.

அவர் வந்து அதை சரிசெய்து விட்டு சென்றுள்ளார். பெண்கள் குளியல் அறையின் shower , switch boards என்பன கழப்பட்டு இருந்தது. இதனால் ரகசிய கேமரா ஏதாவது பொருத்தியிருக்கலாம் என்று பெண்களுக்கு சந்தேம்  எழுந்துள்ளது.

இதையடுத்து விடுதியில் தங்கியிருந்த பெண்கள் தங்களது செல்போனில் Hidden Camera Detector செயலிலயை பதிவிறக்கம் செய்து விடுதியை பரிசோதனை செய்தனர். அப்போது, குளியல் அறை உட்பட பல அறைகளில் ரகசிய கேமராக்கள் இருப்பதற்கான அறியகுறியாக எச்சரிக்கை ஒலி எழுந்தது.

ரகசிய கேமராக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து,Switchboard , LED light,Calling bell ஆகியவற்றில் ரகசிய கேமராக்கள் இருப்பது தெரியவந்துள்ளது . உடனடியாக அந்த பெண்கள் ஆதம்பாக்கம் பொலிசாருக்கு தகவல் அளித்தனர்.

பொலிசாரின் சோதனையில் அனைத்து கேமராக்களும் கண்டுபிடிக்கப்பட்டு முற்றாக அகற்றப்பட்டன. பின்னர் பெண்களின் அந்தரங்கத்தைக் கண்காணித்தாக கஞ்சீவியை பொலிசார் கைது செய்தனர். இதுகுறித்து பொலிசார் விசாணைகளை நடத்தி வருகின்றனர்.

0
Shares