பாகிஸ்தான்- நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான 3வது டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்டத்தின் தற்போதைய நிலவரம்

அபுதாபியில் நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்சில்; நியூசிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 274 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையான மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நேற்று முன்தினம் ஆரம்பமாகிய போது, நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது.

அதன்டிபடி களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 229 ஓட்டங்களை பெற்றது.

நேற்று மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்ற நிலையில் நியூசிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 274 ஓட்டங்களைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சுக்காக களமிறங்கிய பாகிஸ்தான் அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ள இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று 1 க்கு 1 என சமநிலையில் உள்ள நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற்றுவருகின்றது.

இன்றைய போட்டி முற்பகல் 11.30 க்கு ஆரம்பமாகியுள்ள நிலையில் இதுவரையில் பாகிஸ்தான் அணி 78 ஓவர்களில்  3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 209 ஓட்டங்களை பெற்று தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடி வருகிறது

 

 

 

 

 

 

0
Shares