பேராதனைப் பல்கலைக்கழக மாணவிகள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் சிரேஷ்ட மாணவி கைது

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதியில் உள்ள 3 மாணவிகள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் சிரேஷ்ட மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி நீதிமன்ற மஜிஸ்திரேட் முன்னிலையில் குறித்த மாணவி இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் நாளை வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த நொவம்பர் மாதம் 22 ஆம் திகதி 3 மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பிலேயே குறித்த மாணவி கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பில் பேராதனைப் பல்கலைக்கழகம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

 

0
Shares