வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி இம்மாதம் 17 ம் திகதி மீண்டும் கூடவுள்ளது

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி எதிர்வரும் 17 ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி செயலணி ஜனாதிபதி செயலகத்தில் ஒன்றுகூட உள்ளதாக செயலணியின் செயலாளர் எஸ். சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் எந்தவொரு காரணத்திற்காகவும் நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளும் பொதுமக்களுக்கான நலன்புரி சேவைகளும் தடைப்பட கூடாதென ஜனாதிபதி நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

0
Shares