மழை காரணமாக சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை வேண்டுகோள்

மழையுடனான வானிலை காரணமாக, அதிவேக வீதிகளைப் பயன்படுத்தும்போது சாரதிகள் மிக அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.

வாகனங்களை செலுத்தும்போது முன் விளக்குகளை ஒளிரவிட்டவாறு வாகனங்களை செலுத்துமாரும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தற்போது அதிவேக வீதியில் பயணிக்கும் வானங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அதிவேக வீதியின் நடவடிக்கைப் பிரிவின் பணிப்பாளர் எஸ். ஓப்பநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

0
Shares