December 6, 2018
நியூசிலாந்துடனான 3 வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 348 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.
பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அபுதாபியில் நடைபெற்று வருகிறது.
தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 274 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 348 ஓட்டங்களைப் பெற்றது.
இந்நிலையில் நேற்று 74 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து அணி தனது 2வது இன்னிங்சை ஆரம்பித்தது.
நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 26 ஓட்டங்கள் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3வது Test போட்டியின் 4ம் நாள் ஆட்டம் முற்பகல் 11.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது
Voice of Asia Network (Pvt) Ltd
© 2017 Varnam FM. All Rights Reserved