இராணுவ முகாமுக்குள் உள்நுழைந்து திருட முற்பட்ட இருவர் கைது

இராணுவ முகாமுக்குள் அத்துமீறி உள்நுழைந்து திருட முற்பட்ட குற்றச் சாட்டில் இரண்டு பேரை இராணுவத்தினர் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

காங்கேசன்துறை தையிட்டி பகுதியிலுள்ள இராணுவமுகாமுக்குள் புகுந்து இரும்புகள் உள்ளிட்ட பொருட்களை திருடிய போதே குறித்த இருவரையும் நேற்றைய தினம் இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரையும் காங்கேசன்துறை பொலிஸாரிடம் இராணுவத்தினர் ஒப்படைத்தனர்.

அவர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் இருவரையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

0
Shares