ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானியை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று 3வது நாளாக விசாரணை

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானியை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் இன்று மூன்றாவது நாளாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

பிரதம நீதியசரசர் உள்ளிட்ட 7 பேர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தநிலையில், அரச தலைவர் என்ற வகையில் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்திற்கு ஏற்ப ஜனாதிபதி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளமையினால், உயர்நீதிமன்றத்தினால் அது தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியாது என சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய நேற்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மனுதாரர்களுக்கு வர்த்தமானி அறிவித்தலின் சட்டபூர்வ தன்மையை ஆட்சேபனைக்கு உட்படுத்த எவ்வித சட்ட பின்புலமும் இல்லை என்பதனால் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் மன்றில் கோரிக்கை விடுத்தார்.

0
Shares