“தலைவருக்கே தடுமாற்ற நிலை !”-ரணில் விக்ரமசிங்க

நாட்டுத் தலைவரின் அரசியலமைப்பு தொடர்பான அறிவு தற்போது நன்கு புலப்படுகின்றது என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்விடயத்தில் என்ன பேச வேண்டும் என்பது அறியாத ஒரு தடுமாற்ற நிலையே இன்று நாட்டு தலைவருக்கு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

யார் பொருத்தமான அரசியல் நாகரீகமுடையவர் என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும் எனவும் ஜனநாயகத்தை பாதுகாக்க அனைவரும் ஒன்றினைய வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க அறைகூவல் விடுத்தார்.

கொழும்பில் நேற்று ஜனநாயகத்திற்கான தொழிற்துறையினர் ஏற்பாடு செய்த சந்திப்பில் கலந்து கொண்ட போதே ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தமக்கு எதிராக முன்வைத்த அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

225 பேர் ஆதரவளித்தாலும், தமக்கு பிரதமர் பதவியை வழங்கப்போவதில்லை என ஜனாதிபதி கூறிய விடயத்தை ரணில் விக்ரமசிங்க இதன் போது சுட்டிக்காட்டினார்.

இது தம்முடைய பிரச்சினை இல்லை என்றும், நாட்டை ஆட்சி செய்வது அரசாங்கமும், அமைச்சரவையுமாகும்.

அமைச்சரவையின் தீர்மானத்திற்கும் அதன் கூட்டு பொறுப்புக்கும் அமையவே அரசாங்கம் முன்கொண்டு செல்லப்படும்.

அவ்வாறெனில், நாடாளுமன்றத்தின் கருத்திற்கு செவிசாய்க்காமல் எவ்வாறு முன்னோக்கி செல்வது எனவும் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

0
Shares