“நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு 3 அமைச்சுக்களின் பாரிய செலவே பிரதான காரணம்”- டெரன்ஸ் புரசிங்க

நிலவும் அரசியல் நெருக்கடி நிலைமை காரணமாக நாட்டின் பொருளாதாரம் இன்னும் பாரிய வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக அரசியல் மற்றும் பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு முதலீடு, வெளிநாட்டுக் கடன், சுற்றுலாத்துறையினரின் வருகை உட்பட பல்வேறு விடயங்கள் தடைப்பட்டுள்ளதாகவும், பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின்;, அரசியல் விஞ்ஞானம் தொடர்பான சிரேஷ்ட விரிவுரையாளர் டெரன்ஸ் புரசிங்க தெரிவித்துள்ளார்.

இதுவரையில், வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்படாத நிலையில் ஜனவரி மாதத்தில் அரச செலவுகள் தொடர்பில் சிக்கல் உள்ளது என தெரிவித்த அவர் அத்தனைக்கும் அடிப்படைக் காரணம் அதிகார மோகமே ஆகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எமது நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு பாரிய செலவுகள் பிரதான காரணமாகும்.

அந்தப் பாரிய செலவுகளில் பெரும்பங்கு மூன்று வகையான அமைச்சுக்களின் செயற்பாட்டுக்கே செலவாவதாகவும் விரிவுரையாளர் டெரன்ஸ் புரசிங்க தெரிவித்துள்ளார்.

0
Shares