ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானியை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று 4வது நாளாக விசாரணை

ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தை கலைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானியை சவாலுக்கு உட்படுத்தி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 மனுக்கள் மீதான விசாரணை இன்று நான்காவது நாளாக இடம்பெறவுள்ளது.

மனுக்கள் மீதான இன்றைய விசாரணையின் போது மனுதாரர் தரப்பினரின் விளக்கமளிப்பு இடம்பெறவுள்ளது.

நேற்றைய விசாரணையின் போது, நாடாளுமன்றத்தை கலைப்பதாக ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்தி, இன்று வரை பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையை, உயர்நீதிமன்றம் நாளை வரை நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0
Shares