க.பொ.த சா/த பரீட்சையின் போது கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்திய பரீட்சார்த்தி பொலிசாரிடம் ஒப்படைப்பு

கல்விப் பொதுத்தராதர சாதாரன தரப் பரீட்சையின் போது கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தனியார் பரீட்சார்த்தி ஒருவர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தாமதமாக பரீட்சை மண்டபத்திற்கு பிரவேசித்த குறித்த மாணவர் வினாத் தாளுக்கு விடையளித்த விதம் தொடர்பில் பரீட்சை நிலைய பொறுப்பாளருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து , பரீட்சார்த்தியை சோதனைக்குட்படுத்திய போது அவர் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தி பரீட்சைக்கு தோற்றியமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

0
Shares