“30 ஆம் திகதி வரை அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியும்” -பந்துல குணவர்த்தன

இந்த மாதம் 30 ஆம் திகதி வரை பிரச்சனைகள் இன்றி அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று உள்நாட்டு வெளிநாட்டு கடன்களை செலுத்துவதற்கும், மக்களுக்கு ஏனைய நிவாரணங்களை வழங்குவதற்கும் முடியும் என்றும் தெரிவித்த அவர், அரசியல் குழப்ப நிலை காரணமாக அரச சேவையாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பது முறையற்றதாகும் என்றும் தெரிவித்தார்.

0
Shares