இதனால் தான் நயன்தாரா கமலுடன் இணைந்து நடிக்கவில்லை !

தமிழ் சினிமாவின் உச்சத்தில் உள்ள நடிகை நயன்தாரா தற்போது விசுவாசம், விஜய்63 என பல படங்களில் கதாநாயகியாக தோன்றவுள்ளார்.

அடுத்ததாக ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நயனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்பட்டது. ஆனால் படத்தில் நடிகை காஜல் நடிப்பதாக அறிவித்துள்ளார். ஆனால் நயன்தாராவை அணுகியபோது 6 கோடி சம்பளம் கேட்டு ஷங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தை அதிர்ச்சியாக்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் தயாரிப்பு நிறுவனம் போட்ட சில நிர்பந்தங்களுக்கு ஒப்புக்கொள்ளமுடியாது என நயன்தாரா கடுமையாக கூறிவிட்டாராம். அதனால் தான் வேறொரு நடிகையை தெரிவு செய்ததாக கூறப்படுகிறது.

0
Shares