‘EMERGING’ ஆசிய கிரிக்கெட் தொடர் இன்று இலங்கையில் ஆரம்பம்

ஆசிய மட்டத்தில் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான ‘எமர்ஜிங்’ ஆசிய கிரிக்கெட் தொடர் இன்று இலங்கையில் ஆரம்பமாகிறது.

‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவுகளில் நடத்தப்படும் போட்டிகளில் ‘A’ பிரிவு போட்டிகள் இலங்கையிலும் ‘B’ பிரிவு போட்டிகள் பாகிஸ்தானிலும் நடைபெறுகின்றன.

A பிரிவில் உள்ள இலங்கை அணியும் ஓமான் அணியும் கலந்து கொள்ளும் முதலாவது போட்டி இன்று இலங்கையில் நடைபெறவுள்ளது.

இன்று ஆரம்பமாகும் இந்த தொடரானது எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இரண்டு நாடுகளிலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

0
Shares