எதிர்வரும் சிலதினங்களுக்கு மழை தொடரும்

இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள வளிமண்டல தாழமுக்க நிலை காரணமாக நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஏனைய பிரதேசங்களில் மாலை வேளை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தற்போது பெய்துவரும் மழையினால் மகாவலி அதிகார சபையினால் நிர்வகிக்கப்படும் பல நீர்த்தேங்கங்களின் நீர் மட்டம் 80 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0
Shares