அரசியலுக்கு வருவேன், வருவேன் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் பழக்கம் எனக்கு இல்லை

ரஜினிகாந்த் உலகம் முழுவதும் தெரிந்த ஒரு உச்ச நடிகர். இவர் நடிப்பில் இந்த பொங்கலுக்கு பேட்ட படம் திரைக்கு வருகின்றது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் நீண்ட வருடங்களாக அரசியலுக்கு வருவதாக கூறிக்கொண்டே தான் இருக்கின்றார்.

கட்சி தொடங்குவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தும் ஒருவருடம் ஆகின்றது. ஆனால், அவர் தற்போது வரை வரவில்லை.

தற்போது இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரனிடம் அரசியல் வருவது குறித்து கேள்வி கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் ‘இந்தியாவில் ரஜினிகாந்த் சொல்வது போல் வருவேன், வருவேன் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் பழக்கம் எனக்கு இல்லை.

நான் அரசியலுக்கு வரமாட்டேன்’ என்று அவர் தெரிவித்துள்ளார், இது ரஜினி ரசிகர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

0
Shares