“நெஞ்சம் மறப்பதில்லை” தொடரில் அமித் பார்கவ் நடிக்க மாட்டார் !

பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் இருந்து முதலில் நிஷா வெளியேறியிருந்தார்.

இதற்கு காரணம் அவருடைய கதாபாத்திரம் இயக்குனர் தன்னிடம் கதை கூறியதைப்போல அல்லாமல் வேறு மாதிரியாக செல்வதுதான் என்று காரணம் கூறியிருந்தார் .தற்போது அவருக்கு பதிலாக மற்றொரு நடிகை நடித்து வருகிறார்.

இந்த நேரத்தில் திடீரென்று இந்த தொடரின் கதாநாயகனான அமித் பார்கவ்வும் அந்த சீரியலை விட்டு வெளியேறுகிறாராம்.

சீரியலை கடந்து அடுத்த கட்டத்திற்கு வாழ்க்கையில் செல்ல வேண்டும் ,சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதால் தான் அமித் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளாராம்.

 

0
Shares