பிரபலத்தின் மகளுடன் விஷாலுக்கு திருமணம் !

 

 

நடிகர் விஷால் நடிப்பை தவிர நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என்று இரண்டு சங்கங்களை நிர்வகித்து வருகிறார்.

நடிகர் சங்க கட்டிட வேலைகள் முடிந்ததும் முதல் திருமணமாக தன்னுடைய திருமணம் தான் நடக்கும் என்று கூறியிருந்தார்.

விஷால், ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் விஜய் ரெட்டியின் மகள் அனிஷாவை திருணம் செய்ய இருப்பதாக தகவல் பரவியது.இருவருக்கும் நிச்சயதார்த்தமும் முடிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து விஷால் கூறுகையில், “அனிஷாவை திருமணம் செய்து கொள்ள இருப்பது உண்மை தான். இது காதல் திருமணம் அல்ல. பெற்றோர்கள் நிச்சயித்த திருமணம். நிச்சயதார்த்தம் எதுவும் நடைபெறவில்லை. நிச்சயதார்த்தம், திருமண தேதிகளை குடும்பத்தினர் முடிவு செய்வார்கள்.நான், ஏற்கெனவே கூறியது போல புதிய நடிகர் சங்க கட்டடத்தில் தான் திருமணம் நடக்கும். திருமணம் பற்றிய விபரங்களை விரைவில் முறைப்படி அறிவிப்பேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

0
Shares