விசேட பிராந்திய வேலைத்திட்ட அமைச்சராக வீ.ராதாகிருஷ்ணன் பதவிப்பிரமாணம்

விசேட பிராந்தியங்கள் வேலைத்திட்டங்களுக்கான அமைச்சரவை அந்தஸ்தில்லா அமைச்சராக தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.ராதாகிருஷ்ணன் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இன்று முற்பகல் ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உறவுகள் தொடர்பான அமைச்சரவை அந்தஸ்தில்லா அமைச்சராக ரவிந்திர சமரவீரவும், துறைமுகங்கள் மற்றும் கப்ற்துறை பிரதி அமைச்சராக அப்துல்லாஹ் மஹ்ரூப்பும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்.

அமைச்சர் தயா கமகேயிக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுப் பதவியிலும் மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு சமூக வலுவூட்டல் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

 

 

0
Shares